இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் கனமழை பெய்யும் என முன்னர் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. ஜூலை 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படி இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
மேலும் தமிழகத்தில் வரும் 30 ஆம் தேதி வரை மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.