Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபாகரன் வேடத்தில் பள்ளியில் பேசிய மாணவன்! – பாஜக கண்டனம்!

Advertiesment
பிரபாகரன் வேடத்தில் பள்ளியில் பேசிய மாணவன்! – பாஜக கண்டனம்!
, வெள்ளி, 29 நவம்பர் 2019 (08:47 IST)
விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் போல் பள்ளி மாணவன் ஒருவன் வேடமணிந்து வசனம் பேசிய காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடந்த போரின்போது சிங்களர்களை எதிர்த்து நின்ற விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் இரு தினங்களுக்கு முன் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் பல இடங்களில் விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் பலர் கூட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில் சமீப நாட்களில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு சிறுவன் பிரபாகரன் வேடம் அணிந்து வீர வசனங்கள் பேசுகிறான். இந்த வீடியோவை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ள தமிழக பாஜக அது ஒரு பள்ளியில் நடந்த விழா என குறிப்பிட்டுள்ளது. அதில் நடிகர் சத்யராஜ் முதலானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதுகுறித்து பாஜக “இத்தகைய பேச்சுக்களை ஊக்குவிக்கிறதா தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை அதுவும் பள்ளிவளாகத்தில் அரசியல் நிகழ்வுகள், தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் ஆதரவாளர்களின் தீவிரவாத ஆதரவு பேச்சுக்கள் நடத்த அனுமதி அளித்து வேடிக்கை பார்ப்பது தகுமா?” என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் இணைத்து கேள்வியெழுப்பியுள்ளனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டோல்கேட் கட்டணங்களை ஏன் பாதியாகக் குறைக்கக் கூடாது ? – நீதிமன்றம் கேள்வி !