Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் காவல் நிலையம் அருகே பிரபல ரவுடி வெட்டிக் கொலை

Advertiesment
சென்னையில் காவல் நிலையம் அருகே பிரபல ரவுடி வெட்டிக் கொலை
, வியாழன், 12 ஜூலை 2018 (10:09 IST)
சென்னையில் பிரபல ரவுடி ஒருவன் காவல் நிலையம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி தனசேகர் பல கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் வழக்கில் தொடர்புடையவன். சமீபத்தில் இவனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த அவன், திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஆஜராகி தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளான்.
 
நேற்றும் இதேபோல் காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்துள்ளான். அவனைக் கொல்லை திட்டமிட்டு வெளியே அவனுக்காக காத்திருந்த மர்ம நபர்கள், தனசேகரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர்.
 
ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த தனசேகர் சம்பவ இடத்திலே உயிரிழந்தான். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தனசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தனசேகரை கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ. 1350 கோடி வரி ஏய்ப்பு செய்த கிறிஸ்டி நிறுவனம் - 500 கோடி மதிப்புள்ள டெண்டர்கள் ரத்து