Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ. 1350 கோடி வரி ஏய்ப்பு செய்த கிறிஸ்டி நிறுவனம் - 500 கோடி மதிப்புள்ள டெண்டர்கள் ரத்து

Advertiesment
ரூ. 1350 கோடி வரி ஏய்ப்பு செய்த கிறிஸ்டி நிறுவனம் - 500 கோடி மதிப்புள்ள டெண்டர்கள் ரத்து
, வியாழன், 12 ஜூலை 2018 (09:48 IST)
தமிழக அரசுக்கு  முட்டை, பருப்பு, சத்துமாவு உள்ளிட்ட அத்தியாவச பொருட்களை விநியோகிக்கும் கிறிஸ்டி நிறுவனம் 1350 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு உணவு பொருட்கள் வழங்கும் கிறிஸ்டி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த 5ம் தேதி தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான 76 இடங்களில் வருமான வரித்துறையின் சோதனையை தொடங்கினர். கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் வீடு, உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 45க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர். 
 
அதில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கிறிஸ்டி நிறுவனம் ரூ.245 கோடி டெபாசிட் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 1350 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ள கிறிஸ்டி நிறுவனத்திடம் இருந்து 10 கிலோ தங்கம், ரூ.17 கோடி ரூபாய் பணம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
webdunia
இந்நிலையில் சத்துணவு விநியோகத்திற்கு புதிய டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டரில் கிறிஸ்டி நிறுவனம் பங்குபெற்றது. இதனால் தேதி குறிப்படப்படாமல் டெண்டர் ஒத்திவைக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னையே வேணாம்னு சொல்லிட்டியா - மணப்பெண்ணை புரட்டி எடுத்த வாலிபர்(அதிர்ச்சி வீடியோ)