5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த ஏழு நாட்களாக நடந்த நிலையில் நேற்றுடன் ஏலம் முடிவடைந்தது என மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் அதானி ஆகிய நான்கு நிறுவனங்கள் கலந்து கொண்டதாகவும் இதில் அதிகபட்சமாக ஜியோ நிறுவனம் ஏலம் எடுத்த தாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் கடந்த 7 நாட்களில் நடந்த 40 சுற்றுகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலம் போனதாக கூறப்பட்ட நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடந்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஐந்து லட்சம் கோடிக்கு விற்க வேண்டிய ஏலம் வெறும் ஒன்றரை லட்சம் ரூபாய் கோடிக்கு மட்டுமே ஏலம் போயுள்ளது என்றும் மீதமுள்ள பணம் எங்கே சென்றது என்றும் அதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது