Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

5G ஏலம் யாரை சேரும்? இன்று 5வது சுற்று!!

Advertiesment
5G ஏலம் யாரை சேரும்? இன்று 5வது சுற்று!!
, புதன், 27 ஜூலை 2022 (08:24 IST)
இன்று 5ஜி அலைக்கற்றைக்கு 5வது சுற்று ஏலம் நடைபெறுகிறது.


இந்தியா முழுவதும் தற்போது 4ஜி சேவைகள் பிரபலமானதாக இருந்து வருகின்றன. இதன் அதிவேக இணைய வசதிக்கு ஏற்ப சந்தையில் குறைந்த விலையில் இருந்து அதிக விலை வரையிலான 4ஜி ஸ்மார்ட்போன்களும் விற்பனையாகி வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த நெட்வொர்க் நிறுவனங்கள் தீவிரமாக காத்திருக்கின்றன. அந்த வகையில் 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் (72 ஜிகா ஹெர்ட்ஸ்) அலைக்கற்றைக்கான ஏலத்தை ஜூலைக்குள் முடிக்க மத்திய அரசு முடிவெடுத்தது.

அதன்படி 5 ஜி அலைக்கற்றை ஏலம் நேற்று தொடங்கியது. ஜியோ, ஏர்டெல், வேடோஃபோன் - ஐடியாவுடன் அதானி நிறுவனமும் ஏலத்தில் பங்கேற்றன. அலைக்கற்றையை கைப்பற்றும் முனைப்பில் முன்னணி நிறுவனங்கள் மும்முரமாக உள்ளன. இன்று 5ஜி அலைக்கற்றைக்கு 5வது சுற்று ஏலம் நடைபெறுகிறது.

இந்த ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறப்பட்டது. இதில், 4 நிறுவனங்களும் ரூ.21,800 கோடி வரை முன்பணம் செலுத்தியுள்ளன. ரிலையன்ஸ் ரூ.16,000 கோடியும், ஏர்டெல் ரூ.5,500 கோடியும், வோடபோன் ரூ.2,200 கோடியும், அதானி டேட்டா நிறுவனம் ரூ.100 கோடியும் முன்பணம் செலுத்தியுள்ளது.

5ஜி அலைக்கற்றையின் வேகமானது 4ஜியை விட 10 மடங்கு அதிகமானதாக இருக்கும் என்பதால் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமாவதில் பலரும் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

23 எம்பிக்கள் சஸ்பெண்ட்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை!