Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஊராட்சி செயலாளர் காலி பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும் -விஜயகாந்த்

Advertiesment
ஊராட்சி செயலாளர் காலி பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும் -விஜயகாந்த்
, வியாழன், 18 மே 2023 (20:32 IST)
’’தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்   கூடுதல் கவனம் செலுத்தி ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’’ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,

’’ஊராட்சி செயலாளர் காலி பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும், கருவூலம் மூலம் ஊராட்சி செயலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும், பணி வரன் முறை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 12,525 ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள்  சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பாக கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கிராம பகுதிகளில் மக்கள் பணிகள் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

எப்போழுது கிராமங்கள் முன்னேறுகிறதோ அப்போது தான் நமது நாடும் முன்னேறியதாக சரித்திரம் இருக்கும். கிராமத்தின் பிரதிநிதியாக இருக்கும் ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கை மிக முக்கியமானது. தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்   கூடுதல் கவனம் செலுத்தி ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்;; என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கால்நடை உதவி மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்க- டிடிவி. தினகரன்