இது தான் உங்கள் கல்வி கொள்கையா?? தலித் விடுதலை இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

புதன், 14 ஆகஸ்ட் 2019 (21:03 IST)
கரூரில் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து தலித் விடுதலை இயக்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்வி கொள்கையை எதிர்த்து., கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ச.கருப்பையா தலைமை தாங்கி, சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் 5 ஆம் வகுப்பிற்கு மேல் பெயிலானால் திறன் மேம்பாட்டு பயிற்சி அதாவது, செருப்பு தைப்பவர் மகன் செருப்பு தைக்கலாம், விவசாயி மகன் ஏர் ஊழலாம் என்பது தான் புதிய கல்விக் கொள்கையா? என்று முழக்கங்கள் எழுப்பட்டது.

பேட்டி : ச.கருப்பையா – மாநில பொதுச்செயலாளர் – தலித் விடுதலை இயக்கம் 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அத்திவரதர் நாளை மறுதினம் வி.ஐ.பி.க்களுக்கு தரிசனம் தர மாட்டார்..