அத்திவரதர் நாளை மறுதினம் வி.ஐ.பி.க்களுக்கு தரிசனம் தர மாட்டார்..

புதன், 14 ஆகஸ்ட் 2019 (20:43 IST)
காஞ்சிபுரத்தில் அத்திவரதரின் வி.ஐ.பி. தரிசனம், நாளை மறுதினம் ரத்து செய்யப்படும் என ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் எழுந்தருளி கடந்த ஜுலை 1 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சி தந்து வந்த அத்திவரதர், வருகிற 17 ஆம் தேதி மீண்டும் குளத்திற்குள் செல்கிறார். இதுவரை அத்திவரதரை 89.75 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நாளை மறுநாள் வி.ஐ.பி. தரிசனம் கிடையாது என ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். மேலும் 17 ஆம் தேதி அன்று ஆறு கால புஜைகள் நடத்தி, ஆகமவிதிகளின் படி அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ரஜினி கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை: வைகோ