Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.18 லட்சம் செலவு செய்தும் டெங்குவால் உயிரிழந்த சிறுமி: தனியார் மருத்துவமனையின் பகல்கொள்ளை

ரூ.18 லட்சம் செலவு செய்தும் டெங்குவால் உயிரிழந்த சிறுமி: தனியார் மருத்துவமனையின் பகல்கொள்ளை
, திங்கள், 20 நவம்பர் 2017 (05:09 IST)
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்யவும் என்ற விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


 


ஆனால் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் பிரபலமான மருத்துவமனை ஒன்றில் டெங்குவால் பாதிக்கப்பட்ட தனது மகளை சேர்த்துள்ளார். அந்த மருத்துவமனை சிகிச்சை என்ற பெயரில் ரூ.18 லட்சம் வசூல் செய்தும், பின்னர் பிணமாகத்தான் அவருடைய மகளை கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து அந்த நபர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: மருத்துவமனையில் 660 ஊசிக்கு பணம் வாங்கியுள்ளனர். அதன்படி பார்த்தால், 7 வயது குழந்தைக்கு ஒரு நாளுக்கு சராசரியாக 40 ஊசி செலுத்தியுள்ளனர். குழந்தைக்கு எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி ஸ்கேன் எடுக்கச் சொல்லி மருத்துவர்களிடம் பெற்றோர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். 13 ரூபாய் மதிப்புள்ள சுகர் ஸ்டிர்பஸ்க்கு(Sugar strips) 200 ரூபாய் பணம் வாங்கியுள்ளார்கள்' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் இதுகுறித்து அந்த மருத்துவமனை தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்தபோது, 'பாதிக்கப்பட்டவரின் விவரங்களை அளித்தால் இதுகுறித்து விசாரணை நடத்துவோம் என்று கூறியுள்ளது. இருப்பினும் இந்த மருத்துவமனையின் நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து எந்தவித விளக்கத்தையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ஒரே ஒரு பதிலால்தான் உலக அழகி பட்டம் கிடைத்தது!