Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கார் கம்பெனி நிறுவனத்தின் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நபர்

karur
, சனி, 14 ஜனவரி 2023 (23:08 IST)
கரூரில், புதிதாக வாங்கிய கார் அடிக்கடி பழுது. பழுது நீக்கி தர மறுத்த கார் கம்பெனி. பாதிக்கப்பட்ட நபர் உறவினர்களுடன் கார் கம்பெனி நிறுவனத்தின் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
 
கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் மகேந்திரா நிறுவனத்தின் கார், வேன் ,ஆட்டோக்களை விற்பனை செய்யும் சிவா ஏஜென்சி என்ற பெயரில் தனிநபர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் கரூர் அடுத்த வெங்கமேடு கொங்கு நகர் அண்ணா காலனி பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவர்  ரூபாய் 15 லட்சம் மதிப்பில் மகேந்திரா  XUV 300 W என்ற காரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிவா ஏஜென்சில் வாங்கியுள்ளார். இந்த காருக்கு ஒரு வருட காலம் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. கார் வாங்கிய ஐந்தாவது மாதத்திலேயே கார் பழுது ஏற்பட்டுள்ளது. பழுது நீக்க மேற்கண்ட நிறுவனத்தை அணுகியுள்ளார் தனபால். உடனடியாக காரை சரி செய்து அனுப்பி விட்டனர்.  சில நாட்களில் கார் மீண்டும் பழுது ஏற்பட்டது. மீண்டும் நிறுவனத்தை அணுகினார். அவசர கோலத்தில் அப்போதும் காரை சரி செய்து அனுப்பிவிட்டனர்.
 
மீண்டும் அந்தகார் பழுது ஏற்பட்டது. இதுபோல நான்கு முறை  பழுது ஏற்பட்டும் முறையாக பழுது நீக்கி தரப்படவில்லை என கூறப்படுகிறது.
 
காரின் முன் பக்க ஷாக்கப்சர், காலிபர், ட்ரை சாப்ட்டில் இப்போது பழுது ஏற்பட்டுள்ளது.
 
நிறுவனத்தின் சார்பில் முறையாக பழுதை சரி செய்யாததால் அடிக்கடி கார் பழுது ஏற்படுவதால் விரக்தி அடைந்தார் தனபால்.
 
இதனால் அந்த நிறுவனத்தின் மேலாளரை இன்று நேரில் தொடர்பு கொண்டு தனது வாகனத்தில் ஏற்பட்டுள்ள பழுதான பாகங்களை நீக்கி விட்டு புதிய பாகங்களை பொருத்தி சரி செய்து தருமாறு கேட்டுள்ளார்.
 
ஆனால் மேலாளர் மறுப்பு தெரிவித்தார்.
 
இதனால் விரக்தி அடைந்த தனபால் அடிக்கடி பழுதாகும் காரல் தற்கொலை செய்து  கொள்ளும் எண்ணத்திற்கு ஆட்பட்டதாக கூறி நிறுவனத்தின் முன்பு தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் அறிந்த வெங்கமேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தனபாலை நிறுவனத்தின் மேலாளரிடம் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில் ஒரு சில தினங்களில் பழுதான பாகங்களை நீக்கிவிட்டு புதிய உதிரி பாகங்கள் பொருத்தித் தரப்படும் என  கார் நிறுவனத்தின் சார்பில் உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளி நாடுகளில் சொத்து வாங்க, முதலீடு செய்ய தடை - நேபாள வங்கி உத்தரவு