டார்ச்சர்... இடைவிடாத பணிச்சுமை...தற்கொலை செய்து கொண்ட செவிலியர்

சனி, 28 ஜூலை 2018 (10:10 IST)
இடைவிடாத பணிச்சுமையால் செவிலியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கரசமங்கலத்தை சேர்ந்த ஜெனிபர் என்ற இளம்பெண் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளாக செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
 
மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு தொடர்ந்து நைட் ஷிப்டில் வேலை செய்ய கூறியுள்ளது. ஜெனிபர் நிர்வாகத்திடம் ஷிஃப்ட் மாற்றம் செய்யக் கோரி கேட்டுக் கொண்ட போதிலும் மருத்துவமனை நிர்வாகம் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் மனமுடைந்த ஜெனிபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
இதனால் ஆத்திரமடைந்த ஜெனிபரின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விரைந்து வந்த போலீஸார் உரிய நடவடிக்கை என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மோடியிடம் ஆட்டோகிராப் - பேமஸ் ஆன மாணவியை திருமணம் செய்ய போட்டி