பெண் போலீஸார் திட்டியதால் போலீஸ்காரர் தற்கொலை

சனி, 28 ஜூலை 2018 (07:51 IST)
பெண் போலீஸார் தகாத வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்த ஊர்க்காவல் படை போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்கால் வரிச்சிக்குடியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் காரைக்கால் போக்குவரத்து ஊர்க்காவல் படை வீரராக இருந்தார். இவருக்கு தையல்நாயகி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கண்ணனுக்கும் தையல்நாயகிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால், கண்ணன் மீது தையல்நாயகி காரைக்கால் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
புகாரின் பேரில் பெண் காவலர்கள் தனலட்சுமி மற்றும் மர்த்தினி ஆகியோர் கண்ணனை அழைத்து தரக்குறைவாக திட்டியுள்ளனர். இதனால் மனவேதனையில் இருந்த கண்ணன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் தனது தற்கொலைக்கான காரணம் தனது மனைவி தான் என்றும் அதிலும் முக்கியமானவர்கள் என்னை தரக்குறைவாக திட்டிய பெண் காவலர்கள் தனலட்சுமி மற்றும் மர்த்தினி ஆகியோர் தான் என கடிதம் எழுதிவைத்து விட்டு இறந்துள்ளார்.
 
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் உடலை வாங்க மாட்டோம் என கண்ணனின் உறவினர்கள் கூறி வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் காவேரி மருத்துவமனையில் இருந்து கிளம்பிய கருணாநிதியின் குடும்பத்தினர்