பிரபல நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வீட்டிற்குள் மர்ம நபர் நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய், தற்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி அரசியலிலும் கவனம் ஈர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான பண்ணை வீடு நீலாங்கரையில் உள்ள நிலையில் கட்சி சார்ந்த பணிகளை அங்கிருந்து தொடர்வதை விஜய் வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை அந்த வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் நுழைந்துள்ளார். அதோடு அவர் நேராக வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று அங்கு சேர் போட்டு ஹாயாக அமர்ந்திருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற விஜய் அந்த இளைஞரை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவரிடம் யார் என்ன என்று விசாரித்து அவரை கீழே அழைத்துச் சென்று பாதுகாவலர்களுடன் அனுப்பியுள்ளார். விஜய்யுடன் மர்ம நபர் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டுக் காவலாளிகள் அவரை பிடித்ததோடு காவல்துறையிடம் தகவல் சொல்லி ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்திய நிலையில், அந்த மர்ம நபர் மதுராந்தகத்தை சேர்ந்த 24 வயதான அருண் என்பதும், அவர் கடந்த 4 ஆண்டுகளாக மனநிலை சரியில்லாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. விஜய்யை பார்க்க வேண்டும் என அவர் அந்த வீட்டுக்குள் நுழைந்ததாக தெரிகிறது. அவரை போலீஸார் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.
Edit by Prasanth.K