Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2வதும் பெண் குழந்தை: குழந்தையை கொன்று நாடகமாடிய தாய்; பெரம்பலூரில் கொடூரம்

Advertiesment
2வதும் பெண் குழந்தை:  குழந்தையை கொன்று நாடகமாடிய தாய்; பெரம்பலூரில் கொடூரம்
, சனி, 15 டிசம்பர் 2018 (11:54 IST)
பெரம்பலூரில் பெற்ற தாயே 3 மாத குழந்தையை கொன்று நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரை சேர்ந்தவர் பச்சபிள்ளை. இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களுக்கு ரஞ்சிதா (6) என்ற மகள் இருந்த நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. 2வது ஆண் குழந்தை பிறக்கும் என நினைத்திருந்த கோவிந்தம்மாள் பெண் குழந்தை பிறந்ததால் வருத்தத்தில் இருந்துள்ளார்.
 
இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற கோவிந்தம்மாள், தன் மீது யாரோ மயக்க மருந்ந்து தெளித்து, தனது 3 மாத கைக்குழந்தையை கடத்தி சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
கோவிந்தமாள் நடவடிக்கைகளில் சந்தேகித்த போலீஸார், அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், அண் குழந்தை பிறக்காத ஆத்திரத்தில் தனது 3 மாத பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தேன் என கூறினார்.
 
இதனையடுத்து போலீஸார் அந்த பெண் சிசுவை மீட்டனர். மேலும் இந்த கொடூர செயலை செய்த கோவிந்தம்மாள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.  பெற்ற தாயே குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடிபணிந்த ராஜபக்சே: இலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலகல்