Publish Date: Sat, 25 Dec 2021 (12:21 IST)
Updated Date: Sat, 25 Dec 2021 (12:22 IST)
வேலூரில் அடுத்தடுத்து இரண்டு முறை நில அதிர்வுகள் ஏற்பட்டு உள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் அவ்வப்போது திடீர் திடீரென நிலநடுக்கம் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் காலை ஒன்பது முப்பது மணி அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது
இதனை அடுத்து சில நிமிடங்களில் மீண்டும் அதே பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. அடுத்தடுத்து இரண்டு முறை பேரணாம்பட்டு பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இதே பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது