வீலிங் செய்த இளைஞர்! தலைகுப்புற விழுந்த தாத்தா! – வைரல் வீடியோ!

வியாழன், 10 அக்டோபர் 2019 (19:12 IST)
இளைஞர்கள் பைக் வாங்குவதே வீலிங் செய்வதற்குதான் போல! எல்லா இடத்திலும் வீலிங் செய்து சேட்டை செய்யும் வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், இப்போது கொஞ்சம் மாறுபட்ட வீலிங் வைரலாகியுள்ளது.

ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக பலர் வரிசையில் நிற்கின்றனர். அதில் ஒரு இளைஞரும் பைக்கில் காத்திருக்கிறார். அவருக்கு பின்னால் வயதான தாத்தா ஒருவரும் அமர்ந்திருக்கிறார். ஒவ்வொரு வாகனமாக நகர, அவசரம் தாங்க முடியாத அந்த இளைஞர் டாப் கியரில் முன்பக்க சக்கரங்களை தூக்கி ஒரு வீலிங் போட்டார். இதை சற்றும் எதிர்பாராத தாத்தா தவறி தலைக்குப்புற கீழே விழுந்தார். ஆனால் அந்த இளைஞர் அதை பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து கருத்து கூறிய சிலர் “இளைஞர்கள் வீலிங் செய்யட்டும். என்னவாவது செய்யட்டும். அதை பின்னால் யாரும் உட்கார்ந்து இல்லாதபோது செய்யட்டும்.” என்று பதிவிட்டுள்ளனர்.

அடேய் ...எல்லோரும் பைக்க ரோட்லயில்லடா வீலிங் பண்ணுவாங்க ..

நீ என்னடா புதுசா பெட்ரொல் பங்க்ல வீலிங் பண்ணிட்டு

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் உன்ன பெத்ததுக்கு... தாய்க்கு மரண பயம் காட்டிய குட்டி: வைரல் வீடியோ!