தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கியுள்ள நிலையில் அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடைக்காலம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில் தென்மேற்கு பருவக்காற்றும், மழையும் தொடங்கியுள்ளது. கணக்கிடப்பட்ட காலத்திற்கு முன்பே தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இந்த ஆண்டில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு கொங்கன் - கோவா கடலோர பகுதிக்கு அருகே மத்திய கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என கூறப்பட்டுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edit by Prasanth.K