தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு கோவை, நீலகிரி பகுதிகளில் மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்று காலை வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுகுறைக்கூடும். அதேசமயம் வருகின்றன 25ம் தேதி வாக்கில் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து 26ம் தேத் வாக்கில், வடக்கு ஆந்திரா - ஒடிச்சாவை ஒட்டி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி 27ம் தேதி கரையைக் கடக்கக் கூடும்
இதனால் இன்று முதல் 25ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி மலையோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.
26ம் தேதியன்று நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோவையின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K