ஈரோட்டில் பூஜையில் வைக்கப்பட்ட ஒரே எழுமிச்சம்பழம் 30 ஆயிரத்திற்கு ஏலம் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
	
 
									
										
								
																	
	 
	சிவன்ராத்திரியை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே பழந்தின்னி அருப்பண்ண ஈஸ்வர் சித்தர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
	 
	இந்நிலையில் நேற்று பூஜையில் வைக்கப்பட்டிருந்த எழுமிச்சைபழம், ஸ்வாமி கையில் போடப்பட்ட மோதிரம், நெற்றில் இருந்த வெள்ளிகாசு உள்ளிட்டவை ஏலம் விடப்பட்டது.
 
									
										
			        							
								
																	
	 
	அதில் பூஜையில் வைக்கப்பட்டிருந்த எழுமிச்சைப்பழம் 30 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டது. அதுபோக ஸ்வாமியின் நெற்றியில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி காசு 43 ஆயிரத்திற்கும், கையில் போடப்பட்டிருந்த மோதிரம் 50 ஆயிரத்திற்கும் ஏலம் விடப்பட்டது.