Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீரமும் செறிவும் நிறைந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்: ஆதவ் அர்ஜூனா

Advertiesment
வீரமும் செறிவும் நிறைந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்: ஆதவ் அர்ஜூனா

Siva

, வியாழன், 23 ஜனவரி 2025 (12:10 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய ஆதவ் அர்ஜுனா அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சில கருத்துக்களை பதிவு செய்து வரும் நிலையில் இன்று நேதாஜி சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு பதிவை செய்து உள்ளார் அந்த பதிவு இதோ:

வங்காளத்தில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்து, கல்கத்தாவில் தத்துவவியலும், பிரிட்டன் கேம்பிரிட்ஜில் அறிவியலும் பயின்று, குடிமைப் பணி (ICS) தேர்வில் தேர்ச்சி பெற்றவர் நாட்டின் சுதந்திரத்திற்காக அப் பதவியைத் துறந்தார். விடுதலைத் தாகம் கொண்டு தேசிய இயக்க போராட்டத்தில் இணைந்து முன்னணியில் பங்காற்றியவர், காங்கிரஸ் கட்சியின் தலைவராகும் அளவுக்கு உயர்ந்தார்.

பின்னாளில் காங்கிரஸில் இருந்து பிரிந்து 'பார்வர்ட் ப்ளாக்' என்ற இயக்கத்தையும், 'இந்தியத் தேசிய இராணுவம்' என்ற படையையும் கட்டமைத்தாலும் ஒன்றுபட்ட தேச விடுதலை, தேச தலைவர்கள் மீது என்றும் மதிப்பு வைத்திருந்தார். அதனாலேயே, தனது இராணுவப் படைப் பிரிவுகளுக்கு காந்தியார், நேரு, மௌலானா ஆசாத், ஜான்சி இராணி இலட்சுமிபாய் (மகளிர் படை) ஆகியோர் பெயரை வைத்தார்.

காலனிய அடக்குமுறையிலிருந்து தேச விடுதலை, சமத்துவ சமூகம், சோசலிச அரசியல் என்ற லட்சிய பயணத்தில் சிறு சமரசத்திற்கும் இடமின்றி ஆதிக்க எதிர்ப்பு வீரராகத் திகழ்ந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். அதனாலேயே, தேசம் அவரை 'மரியாதைக்குரிய தலைவர்' (நேதாஜி) என்று அழைக்கிறது.

வீரமும் செறிவும் நிறைந்த நேதாஜியின் போராட்ட வலிமையை அவர் பிறந்தநாளான இன்று போற்றி பின்தொடர்வோம்.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி.. தமிழக அரசு அறிவிப்பு..!