Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபலமான கடைகளின் முதலாளிகளுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்-- ராஜேஸ்வரி பிரியா

rajeshwari priya
, சனி, 25 நவம்பர் 2023 (18:44 IST)
குடும்பச் சூழ்நிலை காரணமாக பட்டப் படிப்பினை தொடரமுடியாமல் பள்ளி படிப்புடன் வேலைக்கு வந்துவிடுகின்றனர். பிரபலமான கடைகளின் முதலாளிகளுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை தொலைதூர கல்வி முறையில் பட்டபடிப்பு படிக்க வையுங்கள் என்று ராஜேஸ்வரி பிரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

சென்னை தியாகராய நகரில் பிரபலமான கடைகளில் திருநெல்வேலி, தென்காசி மற்றும் பல ஊர்களிலிருந்து இளம் வயதுடைய நிறைய பெண்களும் ஆண்களும் வேலை செய்வதனை காணமுடிகிறது.

அதில் பலர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் ஆவர்.குடும்பச் சூழ்நிலை காரணமாக பட்டப் படிப்பினை தொடரமுடியாமல் பள்ளி படிப்புடன் வேலைக்கு வந்துவிடுகின்றனர். பிரபலமான கடைகளின் முதலாளிகளுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை தொலைதூர கல்வி முறையில் பட்டபடிப்பு படிக்க வையுங்கள்.

அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமைய உறுதுணையாக இருங்கள். கல்விக்கு உதவுவது என்பது வேறு எந்த உதவியுடனும் ஒப்பிட முடியாத அளவிற்கு ஒப்பற்ற உதவியாகும். சென்னை,கோவை,திருப்பூர் மற்றும் தமிழ்நாடு முழுமையும் உள்ள அனைத்து தொழில் அதிபர்களும் இதனை செய்தால் தமிழகம் உயர்கல்வியில் நூறு சதவீதத்தினை நெருங்கும். ஏற்கனவே படிக்க வைக்கும் முதலாளிகளுக்கு மனமார்ந்த நன்றி. “திறமையான பிள்ளைகள் கல்வியைத் தொடராமல் நிற்பதனை பார்த்தால் இதயம் கலங்குகிறது”. என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இவ்வளவு தானா? பல வழக்குகளை பார்த்தவன் நான்: அண்ணாமலைக்கு மனோதங்கராஜ் பதிலடி..!