விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்துள்ள லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க லலித் குமார் தயாரித்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவை மேற்கொள்ள அனிருத் இசையமைத்துள்ளார். படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது
இந்த படம் தமிழில் ரிலீஸ் ஆகும் அதே நாளில் தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் ஆந்திராவில் மிகப்பெரிய அளவில் மார்க்கெட் வைத்துள்ள விஜய்யின் லியோ திரைப்படம் அங்கு நல்ல வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த படத்துக்கு ஆந்திராவில் முட்டுக்கட்டை போடும் செயல்களை செய்து வருகிறார் விஜய்யின் முந்தைய பட தயாரிப்பாளரான தில் ராஜு. வாரிசு படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்த லலித்குமாருக்கும், அவருக்கும் சில செட்டில்மெண்ட் பிரச்சனைகள் உள்ளதாகவும், அதன் காரணமாகவே அவர் இவ்வாறு செய்வதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் ரிலீஸுக்கு முன்பாக இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்றும் சொல்லப்படுகிறது.