Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மண் காப்போம் இயக்கம் சார்பில் 1,500 விவசாயிகளுடன் களைகட்டிய மாபெரும் கருத்தரங்கு!

Isha
, திங்கள், 9 ஜனவரி 2023 (15:22 IST)
ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் தென்னையில் இருந்து 15 வகையான வருமானம் ஈட்டுவது குறித்த விவசாய கருத்தரங்கு பொள்ளாச்சியில் நேற்று (ஜன.8) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
 

நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 1,500 விவசாயிகள் பங்கேற்று பெற்றனர். பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கு. சண்முகசுந்தரம், பொள்ளாச்சி சார் ஆட்சியர் திருமதி. எஸ்.பிரியங்கா மற்றும் பொள்ளாச்சி வர்த்தக சபையின் தலைவர் திரு. ஜி ஜி. டி. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

இந்த கருத்தரங்கில் தென்னை விவசாயிகள் 15 வகையான வருமானங்களை தென்னையில் இருந்து எப்படி பெற முடியும் என்பது முதல் தென்னையில் அவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்களுக்கும் தீர்வுகள் பெறும் வகையிலும் பல்வேறு நிபுணர்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
 
webdunia

குறிப்பாக, முன்னோடி விவசாயி திரு. வள்ளுவன், சித்த மருத்துவர் திரு கோ சித்தர், பூச்சியியல் வல்லுநர் திரு சாமிநாதன், மண்ணியல் நிபுணர் திரு. சரவணன் கந்தசாமி, தேனீ வளர்ப்பு சாதனையாளர் திருமதி. ஜோஸ்பின் மேரி(விபீஸ்), இளம் தொழில் முனைவர் திருமதி. யமுனா தேவி, காவேரி கூக்குரல் கள ஒருங்கிணைப்பாளர் திரு தமிழ் மாறன் மற்றும் நீரா உற்பத்தியாளர் திரு. தனபால் ஆகியோர் பல்வேறு விதமான ஆலோசனைகளை அளித்தனர்.

மண்ணின் வளத்தை கூட்டி தென்னையில் உற்பத்தியை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களும் தென்னை சார்ந்த பொருட்களில் மதிப்பு கூட்டினால் அதிக லாபம் எடுக்கும் வழிமுறைகள் பற்றியும் இந்த கருத்தரங்கில் வல்லுனர்கள் பேசினர்.

இது மட்டும் அல்லாது தேனீ பெட்டிகளை தென்னந்தோப்பில் வைப்பதன் மூலம் எவ்வாறு காய்ப்பு திறன் அதிகமாகிறது, இளநீர் மட்டுமே அல்லாமல் நீரா பானத்தின் மூலமும் ஆண்டு முழுவதும் வருமானம் பெறும் வழிகள், வெள்ளைப் பூச்சிகளின் தாக்கத்திலிருந்து தென்னையை எவ்வாறு பாதுகாப்பது, தென்னைக்குள் கோடிகளை கொட்டி தரும் மிளகு மற்றும் டிம்பர் கூட்டணி, தாய்க்கு இணையான தென்னையின் மருத்துவ குணங்கள் என அனைத்து தகவல்களும், அன்றாடம் தென்னை விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வுகளும் இந்த கருத்தரங்கில் ஒரே மேடையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளுனர் தன்னுடைய உரையில் தவிர்த்த வார்த்தைகள் என்ன? வெளியான விவரம்!