Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வயிற்று வலிக்காக எலி மருந்தை குடித்த சிறுமி – திருச்சியில் பரிதாபம்

Advertiesment
வயிற்று வலிக்காக எலி மருந்தை குடித்த சிறுமி – திருச்சியில் பரிதாபம்
, சனி, 27 ஜூலை 2019 (16:33 IST)
திருச்சி அருகே 13 வயது சிறுமி ஒருவர் வயிற்று வலி மருந்து என்று நினைத்து எலி மருந்தை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அருகே உள்ள அலங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சிராஜுதீன். இவரது மகள் மகபுநிஷா. அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் சில மருந்துகளை அவருக்கு வழங்கியிருக்கின்றனர்.

அன்று வழக்கம்போல மருந்துகளை எடுத்து உட்கொண்டிருக்கிறார் மகபுநிஷா. சிறிது நேரத்தில் மயங்கி விழுந்திருக்கிறார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் எலி மருந்தை சாப்பிட்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

மருந்துகள் வைக்கும் அலமாரியில் இருந்த எலி மருந்தை தவறுதலாக மகபுநிஷா உட்கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் மகபுநிஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

116 மொழிகளில் பாடி அசத்தும் 13 வயது மாணவி : வைரல் செய்தி