Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த சிறுமி! – உயிர்தப்பிய அதிசயம்!

Advertiesment
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த சிறுமி! – உயிர்தப்பிய அதிசயம்!
, புதன், 9 அக்டோபர் 2019 (21:07 IST)
நெல்லை அனந்தபுரி எக்ஸ்பிரஸில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ஓடு ரயிலில் இருந்து தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை அருகே உள்ள பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பேட்ரிசன். தனது குடும்பத்தினருடன் திருவனந்தபுரம் சென்ற பேட்ரிசன் அனந்தபுரி விரைவு ரயிலில் ஊர் திரும்பி கொண்டிருந்திருக்கிறார். வள்ளியூர் ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்த ரயிலில் பேட்ரிசனின் 6 வயது மகள் ஸ்மைலின் அவசர வழி ஜன்னல் அருகே நின்ரு விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்த ஜன்னல்களில் கம்பிகளை தேவைப்பட்டால் மேலே தூக்கி விடும் வசதி உண்டு.

ஸ்மைலின் விளையாடிக் கொண்டிருந்தபோது ஜன்னல் கம்பிகள் மேலே தூக்கப்பட்டிருந்தன. இதை பேட்ரிசன் கவனிக்கவில்லை. விளையாடிக் கொண்டிருந்த ஸ்மைலின் திடீரென நிலைத்தடுமாறி ஜன்னல் வழியாக ரயிலுக்கு வெளியே விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பேட்ரிசன் மற்றும் பொதுமக்கள் உடனடியாக சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.

அதிர்ஷ்டவசமாக ஸ்மைலின் ரயில் தண்டவாளத்தில் விழாமல் தவறி எதிர்பக்கம் விழுந்ததால் சிறு காயங்களுடன் உயிர்பிழைத்தார். நெல்லை சந்திப்புக்கு வந்த ஸ்மைலினுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பத்திரமாக வீட்டுக்கு பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தல் பிரச்சாரத்தில் மயங்கி விழுந்த அதிமுக அமைச்சர்! – மருத்துவமனையில் அனுமதி!