Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதை கூட இண்டர்நெட்ல பாத்து செய்ய ஆரம்பிச்சிட்டாங்களே! – யூடியூப் பார்த்து ஏடிஎம் கொள்ளை!

Advertiesment
இதை கூட இண்டர்நெட்ல பாத்து செய்ய ஆரம்பிச்சிட்டாங்களே! – யூடியூப் பார்த்து ஏடிஎம் கொள்ளை!
, புதன், 9 அக்டோபர் 2019 (18:50 IST)
காஞ்சிபுரம் அருகே யூட்யூப் வீடியோவை பார்த்து இரண்டு இளைஞர்கள் ஏடிஎம்மை கொள்ளையடிக்க முயன்ற வினோத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இணையம் வளர்ச்சியடைந்துள்ள இந்த காலத்தில் குற்றங்களுக்கும் சில சமயம் இந்த தொழில்நுட்பங்களே காரணமாக அமைந்துவிடுவது உண்டு. எந்த விதமான தொழில்நுட்ப கோளாறு என்றாலும், சமையல் செய்வது என்றாலும் எல்லா தேவைகளுக்கும் யூட்யூபில் வீடியோக்கள் கிடைத்து விடுகின்றன. சில வம்பான வீடியோக்களும் சில சமயம் யூட்யூப் மூலம் கிடைக்கப்பெறுகின்றன. அப்படி எளிய முறையில் ஏடிஎம்மை கொள்ளை அடிப்பது எப்படி என்று யாரோ வெளியிட்டிருந்த வீடியோவை நம்பி கொள்ளையடிக்க போய் வசமாக மாட்டியிருக்கிறார்கள் இரண்டு இளைஞர்கள்.

காஞ்சிபுரம் கீழபடப்பை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இருவர் ஏடிஎம் எந்திரத்தை கொள்ளையடிக்கும் வழிமுறைகளை வீடியோவாக பார்த்துவிட்டு, அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்மை கொள்ளையடிக்க முயன்றிருக்கிறார்கள். அதிலிருந்து எச்சரிக்கை தகவல் வங்கி தலைமையகத்துக்கு செல்ல, அவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸார் விரைந்து சென்று அந்த இளைஞர்களை கைது செய்தனர். விசாரணையில் வீடியோ பார்த்து திருட முயற்சித்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி இலவச வாய்ஸ்கால் கிடையாது: ஜியோவின் திடீர் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி: