Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிக்கன் 65ல சிக்கனே இல்ல..! – ஓட்டலில் அட்டூழியம் செய்த போதை கும்பல்!

Advertiesment
Chicken 65
, புதன், 15 ஜூன் 2022 (11:16 IST)
தாம்பரம் அருகே சேலையூரில் உணவகம் ஒன்றில் சிக்கன் பீஸ் கெட்டு தகராறு செய்த போதை கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தாம்பரம் அருகே சேலையூர் பிரதான சாலையில் உணவகம் ஒன்றை நடத்தி வருபவர் ராஜா. இவரது உணவகத்திற்கு நேற்று முன்தினம் மது அருந்திய கும்பல் ஒன்று உணவருந்த வந்துள்ளது. அவர்கள் சிக்கன் 65, ஆம்லேட் என பலவகை உணவுகளையும் ஆர்டர் செய்துள்ளனர்.

அவர்களுக்கு தரப்பட்ட சிக்கன் 65ல் சிக்கனே இல்லை என கூறி வாக்குவாதம் செய்ததோடு, சப்ளையர்களையும் ஒருமையில் பேசியுள்ளனர். இதனால் கடைக்காரருக்கும், அவர்களுக்கும் தகராறு எழுந்த நிலையில் பணத்தை கொடுக்காமல் தப்பி செல்ல முயன்றுள்ளனர்.

அவர்களை தடுக்க முயன்ற பொதுநபர் ஒருவரின் தங்க சங்கிலியையும் பறித்துக் கொண்டு அந்த கும்பல் சிட்டாக பறந்துள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட வழக்கின்பேரில் வண்டி எண், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார் 5 பேரை கைது செய்துள்ளனர், அதில் ஒருவர் மைனர். இவர்கள் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலேஜ் துவங்கியதும் கைமேல காசு - மாணவிகளுக்கு குட் நியூஸ்!