பெற்றோர் சரக்கடிக்க பணம் தராததால் மகன் தற்கொலை

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (09:18 IST)
பெரம்பலூரில் தாய் மதுகுடிக்க பணம் தராததால் மனமுடைந்த மகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பெரம்பலூரை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. பிரகாஷ் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் அவரது மனைவி, பிரிந்து சென்றுவிட்டார்.
 
இந்நிலையில் தனது தாயுடன் வசித்து வந்த பிரகாஷ், வேலைக்கு செல்லாமல் குடித்து வந்துள்ளார். சம்பவத்தன்று தனது தாயிடம் பிரகாஷ் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரது தாய் மது குடிக்க பணம் தர மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பிரகாஷ் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
 
அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், பிரகாஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணிக்காக விஜயை மிரட்டுகிறார்கள்!.. டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி...

வதந்தி பரப்புகிறார்கள்!. சிபிஐ விசாரணையில் நடந்ததே வேறு!.. நிர்மல்குமார் குற்றச்சாட்டு!...

சிபிஐ விசாரணை 2வது நாள்!.. விஜயிடம் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகள்!....

கேரள நபர் தற்கொலை!.. வியூஸுக்காக ஆசைப்பட்டு வீடியோ எடுத்தாரா அந்த பெண்?!..

போட்டி போட்டு பீர் குடித்த இளைஞர்கள்!.. 19 பீர் குடித்த 2 இளைஞர்கள் மரணம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments