Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஃபுல் போதையில் லுங்கியுடன் வந்த டாக்டர்: நர்சுகளை பாடாய் படுத்திய கொடூரம்

ஃபுல் போதையில் லுங்கியுடன் வந்த டாக்டர்: நர்சுகளை பாடாய் படுத்திய கொடூரம்
, வியாழன், 8 நவம்பர் 2018 (08:19 IST)
திருவையாறு அரசு மருத்துவமனையில் டியூட்டி நேரத்தில் மருத்துவர் குடிபோதையில் ஹாஸ்பிட்டலுக்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவையாறு அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நைட் டியூட்டிக்கு வந்த டாக்டர் மகபூப் பாட்சா மது அருந்திவிட்டு செம போதையில் இருந்துள்ளார். 
 
மருத்துவமனைக்கு வந்த அவர் நேராக சென்று பெட்டில் படுத்துக்கொண்டார். அந்த நேரம் பார்த்து உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.  நர்சுகள் டாக்டரை எழுப்ப முயற்சி செய்தார்கள். ஆனால் அவரோ கதவை தாழிட்டுக் கொண்டு ஜாலியாக லுங்கியுடன் உறங்கிக் கொண்டிருந்தார். நர்சுகள் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறினர்.
webdunia
 
இதுகுறித்து தலைமை மருத்துவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தலைமைக் மருத்துவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்தார். மேலும் டியூட்டி நேரத்தில் குடித்துவிட்டு வந்த மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்க டார்கெட் விஜய் இல்ல: அது தான்; தமிழிசை ஓபன் டாக்