Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 25 April 2025
webdunia

13 வயது சிறுமியின் தலையுடன் தெருவில் நடந்த போதை ஆசாமி: போலீசில் பிடித்து கொடுத்த மனைவி

Advertiesment
youth
, செவ்வாய், 23 அக்டோபர் 2018 (08:53 IST)
மதுபோதை தலைக்கேறி 13 வயது சிறுமியின் தலையை தனியாக வெட்டி தலையுடன் தெருவில் நடந்த போதை ஆசாமியால் ஆத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி என்ற கிராமத்தில் சாமுவேல்-சின்னப்பொண்ணு என்ற தம்பதியின் மகள் ராஜலட்சுமி என்ற சிறுமியை அதே பகுதியில் உள்ள கார்த்தி என்ற 27 வயது அடிக்கடி சில்மிஷம் செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சம்பவ தினத்தன்று முழு குடிபோதையுடன் ராஜலட்சுமி தனியாக இருந்த நேரத்தில் அவரது வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய கார்த்தி முயன்றுள்ளார். இதனால் ராஜலட்சுமி கூச்சலிட்டார். இதனையடுத்து ஆத்திரம் அடைந்த கார்த்தி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜலட்சுமியின் தலையை தனியாக வெட்டி போதையுடன் தெருவில் நடந்தார். இந்த கொடூர சம்பவத்தை பார்த்த அந்த பகுதியில் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கார்த்தியின் மனைவி உடனே போலீசுக்கு தகவல் கொடுத்து தனது வீட்டில் மறைந்திருந்த கணவரை பிடித்து கொடுத்தார். தற்போது ராஜலட்சுமியின் தலை மற்றும் உடலை கைப்பற்றிய போலீசார், கார்த்தி மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண்ணீர் மல்க ஐயப்பனை வழிபட்ட கேரள ஐஜி...என்ன காரணம்?