இன்று தமிழகம் முழுவதும் கிராம சபையை நடத்த தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில் தடையை மீறி கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் முக ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
திண்டுக்கல் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த புது சத்திரம் என்ற பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். மேலும் இந்த கூட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
கொரோனா ஊரடங்கு தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் கிராம சபைக் கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தடையை மீறி முக ஸ்டாலின் திமுக கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டதாக கொரட்டூர் கிராம நிர்வாக அலுவலர் வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த வெள்ளவேடு போலீசார் திமுக தலைவர் முக ஸ்டாலின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி உள்பட 200 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த தகவல் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது