Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’எலக்ட்ரிக் கார் சூப்பர் ஸ்டார்’’…எலான் மஸ்க் இந்தியாவில் கால்பதிக்கிறார் ! எப்போது தெரியுமா?

’’எலக்ட்ரிக் கார் சூப்பர் ஸ்டார்’’…எலான் மஸ்க் இந்தியாவில் கால்பதிக்கிறார் ! எப்போது தெரியுமா?
, வெள்ளி, 2 அக்டோபர் 2020 (16:55 IST)
எலக்ட்ரில் கால் உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் எலான் மஸ்க், இவர் வரும் 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் கால்பதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

உலகில் எலக்ட்ரானிக் ரக வாகனங்கள் மற்றும் விண்வெளித் திட்டப் பயணம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுவரும் எலான் மஸ்கிம்ன் டெல்ஸா நிறுவனத்தின் பங்குகள் சமீபத்தில் உயர்ந்ததால் உலகப் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர் பெர்க்கை பின்னுக்குத்தள்ளிவிட்டு, எலான் மஸ்க் மூன்றாவது இடம் பிடித்தார்.

 
எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 8 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபா ஆக இருந்த நிலையில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய கோடீஸ்வரராக இருந்தார்.

இந்நிலையில், எலான் மஸ்கின் சொத்து மதிப்பு வெறும் 6 மணிநேரத்தில் 1 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் எலான் மஸ்கின் நிறுனம் குறித்து இன்னொரு தகவல் வெளியாகிறது.
எலான் மஸ்கின் டெஸ்லா எலக்ட்ரிக் கார் நிறுவனம் ச்வரும் 2021 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் கால்பதிக்கவுள்ளது.

ஏற்கனவே இதுகுறித்து அவர் 2019 ஆம் ஆண்டு டுவிட் செய்திருந்தார் என்றாலும் வரும் ஆண்டில் நிச்சயமாக  டெஸ்லா இந்தியாவில் அறிமுகமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்க வாழ் இந்தியர்கள்… 6.5 சதவீதம் வறுமைக் கோட்டுக்கு கீழே!