Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ சி சண்முகத்தின் வேட்புமனு நிறுத்தி வைப்பு – பரபரப்பில் வேலூர் தேர்தல் !

Webdunia
வெள்ளி, 19 ஜூலை 2019 (13:38 IST)
அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ சி சண்முகத்தின் வேட்புமனு பரிசீலனையின் போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வேலூர் தொகுதிக்கு மட்டும் ரத்து செய்யப்பட்ட மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மீண்டும் நடக்க இருக்கிறது. இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்தும் அதிமுக சார்பில் ஏ சி சண்முகமும் மீண்டும் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடுகிறார் தீபலஷ்மி. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றோடு முடிந்தது.

இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேட்புமனுக்களுக்கான பரிசீலனைகள் நடந்தன. அப்போது அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரான புதிய நீதிக் கட்சியின் தலைவரான ஏ சி சண்முகத்தின் வேட்புமனுவின் மீது யாருக்காவது ஆட்சேபணை இருக்கிறதா என்ற கேள்விக்கு திமுகவினர் சிலர் ‘வேட்பாளர் ஏ.சி. சண்முகம் புதிய நீதிக் கட்சியின் தலைவர். அவர் அதிமுக என்ற கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். அப்படியெனில் அவர் அதிமுக என்ற கட்சியின் உறுப்பினராகியிருக்கிறாரா?  அப்படி இருந்தால் அது வேட்புமனுவில் இணைக்கப்பட்டுள்ளதா ?’ எனக் கேள்வி எழுப்பினர். இதனால் அவரது வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவினர் இதற்கெதிராக கூச்சல் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments