கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேலூர் தேர்தலில் போட்டியிடாதது ஏன் என அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக திமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வேட்பாளரை அறிவித்து களத்திலும் பிரச்சாரத்தில் இறங்கி விட்ட நிலையில் தினகரனின் அமமுக வேலூர் தொகுதியில் போட்டியிடவில்லை என ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியும் வேலூர் தொகுதியில் போட்டியிடவில்லை என இன்று அறிவித்துள்ளது
வேலூர் தொகுதி தேர்தல் எதற்காக நிறுத்தப்பட்டதோ அந்த காரணம் அப்படியே இருக்கும் நிலையில் அதே வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடும் நிலையில் இந்த தேர்தல் நியாயமானதாக இருக்காது என்பதால் போட்டியிடவில்லை என கமலஹாசன் போட்டியிடாததற்கு ஒரு காரணத்தை கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வேலூர் தேர்தலில் கமல் போட்டியிடாதது குறித்து அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘கமல் பிக்பாஸில் பிஸியாக இருக்கிறார். அதனால் தான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை’ எனக் கூறியுள்ளார்.