குஜராத்தில் 3ம் வகுப்பு படிக்கும் சிறுமி மாரடைப்பு வந்து பள்ளியிலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் வயதானவர்களுக்கு மட்டுமே இருந்து வந்த சர்க்கரை வியாதி, மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் தற்போது குழந்தைகளுக்கும் வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. சமீப காலங்களில் இளைஞர்களே பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில் குஜராத்தில் 3வது படிக்கு சிறுமி மாரடைப்பால் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த 8 வயது சிறுமி கார்கி ரன்பரா அங்குள்ள தல்தேஜ் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். காலை எல்லா குழந்தைகளை போலவே பள்ளிக்கு சென்ற சிறுமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
உடல் அசௌகர்யத்தை உணர்ந்த சிறுமி அருகில் உள்ள சேரில் அமர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக சிறுமி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமி மாரடைப்பால் பலியான வீடியோ வைரலாகி வரும் நிலையில், இது பலருக்கும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K