Publish Date: Wed, 08 Jan 2025 (07:42 IST)
Updated Date: Wed, 08 Jan 2025 (08:02 IST)
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து முழங்கால் காயத்தினால் அவதிப்பட்ட ஷமிக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை லண்டனில் நடந்தது.
அதன் பின்னர் பல மாதங்கள் பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சியை மேற்கொண்டு குணமானார். இதையடுத்து ரஞ்சிக் கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடிய அவர் மத்திய பிரதேச அணிக்கு எதிராக 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். ஆனாலும் அவருக்கு காலில் வீக்கம் இருந்ததால் அவர் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விளையாடவில்லை.
இந்நிலையில் அவர் பிப்ரவரி மாதம் நடக்கும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் களமிறங்குவார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.