Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

15 வயது சிறுவனை கடத்தி சென்று குடும்பம் நடத்திய 22 வயது பெண் கைது

Advertiesment
தருமபுரி
, சனி, 21 ஏப்ரல் 2018 (12:47 IST)
தருமபுரியில்  22 வயது பெண் ஒருவர் 15 வயது சிறுவனை கடத்தி சென்று குடும்பம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் வேட்டகட்டமவுடு பகுதியை சேர்ந்தவர் தசரதன். தசரதனின் மகன் அருகிலுள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். தசரதனின் உறவினர் மகளான வேலம்மாளுக்கு(22), தசரதனின் மகனோடு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. இதனையறிந்த தசரதன் வேலம்மாலைக் கண்டித்துள்ளார்.
 
இந்நிலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகன் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தசரதன், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
webdunia
போலீஸார் நடத்திய விசாரனையில் ஓடி போன இருவரும் பெங்களூருவில் தங்கி குடும்பம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களை மீட்ட போலீஸார், மாணவனை குழந்தைகள் நலக் காப்பகத்தில் அனுமதித்தனர். மேலும் சிறுவனை கடத்தி குடும்பம் நடத்திய வேலம்மாலை போலீஸார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய அரசு கட்டுப்படுத்த ஆந்திரா ஒன்றும் தமிழகம் இல்லை...