Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றும் 1000க்கும் குறைவான கொரோனா பாதிப்பு!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (20:15 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 973 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 27,04,586 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 973 பேர்களில் 109 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 21 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 36,157ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 1,114 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 26,57,282  ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 1,15,219 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 513,94,614 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனமழை எச்சரிக்கை: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை! - வனத்துறை உத்தரவு!

ஆப்பிள் மட்டுமல்ல, சாம்சங் நிறுவனத்திற்கும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்.. அதிர்ச்சி தகவல்..!

சட்லெஜ் நதியின் நீர்வரத்து 75% குறைந்தது.. நதியின் பாதையை மாற்றியதா சீனா? இந்தியா அதிர்ச்சி..!

தமிழ்நாடு அரசு தலைமை காஜி காலமானார்: தவெக தலைவர் விஜய் இரங்கல்..!

கமல் சார் கழுத்தை நன்றாக நெரித்துவிட்டேன்! அவரோட ரியாக்‌ஷன்..? - சிம்பு சொன்ன ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments