மீண்டும் மீண்டும் அராஜகம்.. ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது..!

Siva
செவ்வாய், 23 ஜனவரி 2024 (10:04 IST)
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருவது தொடர்கதையாகி வரும் நிலையில் இதற்கு முடிவு காட்ட மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர் சங்கங்கள் மற்றும் மீனவர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை எடுத்து வருகின்றனர் 
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பலமுறை மத்திய அரசுக்கு இதுகுறித்து  கடிதம் எழுதியுள்ளார் என்பதும் மத்திய அரசும் இலங்கை அரசிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் தொடர்ச்சியாக மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இலங்கை கடற்படையின் தொடர் அராஜகத்திற்கு முடிவு கட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இன்று மீண்டும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே  மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்ததாகவும், அவர்களிடம் இருந்த 2 படகுகளும் சிறைபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments