Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத அரசியலா? மனித அரசியலா? ஒரு கை பார்ப்போம்?- உதயநிதி ஸ்டாலின்.!

Senthil Velan
செவ்வாய், 23 ஜனவரி 2024 (09:59 IST)
இரண்டு முறை பிரதமரான நரேந்திர மோடியை தமிழக மக்கள் ஏற்கவில்லை என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இளைஞரணி மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மத அரசியலா? மனித அரசியலா? மனு நீதியா?  சமூக நீதியா? மாநில உரிமையா? பாசிச அடக்கு முறையா? என ஒரு கை பார்த்து விடுவோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தியா கூட்டணி வென்றால் கலைஞரின் முழக்கமான மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பது இந்தியாவின் முழக்கமாகும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
 
நரேந்திர மோடி இரண்டு மோடி பிரதமர் ஆகியிருக்கிறார். அந்த இரண்டு தேர்தல்களிலும் தமிழ்நாட்டு மக்கள் அவரை ஏற்கவில்லை என குறிப்பிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், இப்போது மூன்றாவது முறையும் தமிழ்நாடு அவரை ஏற்க போவதில்லை என்று கூறியுள்ளார்.

ALSO READ: நாடக மேடையில் மயங்கி விழுந்து இறந்த அனுமன்.. நடிப்பு என நினைத்த மக்களுக்கு ஷாக்!
 
இளைஞரணி மாநாட்டின் வெற்றி, 2024 மக்களவை தேர்தலிலும் எதிரொலிக்கட்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1.5% உயரும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

கள்ளச்சாராய சாவு வழக்கில் திமுக அரசின் முயற்சிக்கு சம்மட்டி அடி: டாக்டர் ராமதாஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்துவிடும்: கனிமொழி எம்.பி.

டிடிவி தினகரன் நிகழ்ச்சியில் ‘கடவுளே அஜித்தே’ கோஷம்.. அதற்கு அவர் கொடுத்த கமெண்ட்..!

தாறுமாறாக ஓடிய காரால் பயங்கர விபத்து.. சென்னை வேளச்சேரி அருகே பதற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments