தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனாதையாக சுற்றித்திரிந்த சிறுவன் சமூகநல அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரவு நேரத்தில் 2 வயது சிறுவன் ஒருவன் அனாதை போல சுற்றி வந்தான்.
இதனால் மருத்துவமனை பணியாளர்கள் அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவனுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரும் அங்கு இல்லை என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அந்த சிறுவனைப் பற்றி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், சிறுவனை மாவட்ட சமூக நல அலுவலர் மகேஸ்வரியின் பாதுகாப்பில் அவர்கள் ஒப்படைத்தனர். தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் அந்த சிறுவனை வளர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.