Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’மஞ்சுமெல் பாய்ஸ்’ பார்க்க சென்று மாயமான 8ம் வகுப்பு மாணவன்! – கேரளாவில் பரபரப்பு!

Advertiesment
Boy silhoutte

Prasanth Karthick

, ஞாயிறு, 3 மார்ச் 2024 (15:27 IST)
கேரளாவில் ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படத்தை வீட்டுக்குத் தெரியாமல் பார்க்க சென்ற மாணவன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



சமீபத்தில் மலையாளத்தில் வெளியான பிரமயுகம், பிரேமலு, மஞ்சுமல் பாய்ஸ் ஆகிய படங்கள் கேரளாவில் மட்டுமல்லாது தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பெரும் வெற்றிப்பெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவின் ஆழப்புலா பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் சிறுவன் அந்த படத்தை பார்க்க விரும்பியுள்ளான்.

இதற்காக வீட்டில் யாருக்கும் தெரியாமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு 20 கி.மீ பயணித்த சிறுவன் அங்கு உள்ள தியேட்டர் ஒன்றில் இரவு 8 மணிக் காட்சிக்கு பிரேமலுவும், அதை தொடர்ந்து மஞ்சுமல் பாய்ஸ் படத்தையும் பார்த்துள்ளான். படம் முடிந்து நள்ளிரவு வேளையில் சைக்கிளிலேயே திரும்ப வந்துக் கொண்டிருந்தபோது இருட்டில் பாதை மாறி தொலைந்துள்ளான்.


அதேசமயம் இரவு நெடுநேரமாகியும் மகனை காணததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அவர்களும் சிறுவனை தேடிக் கொண்டிருந்துள்ளனர்.

வழிதெரியாமல் சிக்கி நின்றுக் கொண்டிருந்த சிறுவனை அவ்வழியாக சென்ற தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் பார்த்து, அவனை விசாரித்து அழைத்து சென்று வீட்டில் விட்டுள்ளார். படம் பார்ப்பதற்காக சிறுவன் செய்த இந்த செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் வருவதால் சென்னை போக்குவரத்தில் நாளை மாற்றம்! – முழு விவரம்!