Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு நிமிடத்தில் 8 லட்சம் கொள்ளையடித்த பலே திருடர்கள்

Advertiesment
ஒரு நிமிடத்தில் 8 லட்சம் கொள்ளையடித்த பலே திருடர்கள்

Arun Prasath

, ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (14:53 IST)
வங்கிக்குள் நுழைந்து ஒரு நிமிடத்தில் ரூ.8 லட்சம் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பீகார் மாநிலம், முஸாப்பூர் என்ற இடத்தில் இயங்கி வரும் ஐசிஐசிஐ வங்கியில், தலையில் ஹெல்மெட்டுடன் 6 பேர் நுழைந்தனர். உள்ளே நுழைந்ததும் இருவர், அங்கிருந்த வாடிக்கையாளர்களையும், வங்கி ஊழியர்களையும் கட்டுப்படுத்தினர். மேலும் இருவர் காவலாளியிடமிருந்து துப்பாக்கியை கைப்பற்றினர்.

மற்ற இருவரும், பணத்தை கொள்ளையடிக்கும் பொறுப்பை ஏற்றனர். கிட்டத்தட்ட 8,05,115 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீஸார், 6 கொள்ளையர்களும் ஒரு நிமிடத்திற்குள் கொள்ளையடித்து வெளியேறினர் என்று கூறுகிறார். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையை தொடங்கவுள்ளதால், சீக்கிரம் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என கூறுகின்றனர்.

ஆனால் ஹெல்மேட் அணிந்து திருடியதால், அவர்களை கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவம் அந்த வங்கியிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Courtesy ANI

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 கிடாய்கள் பலியிட்டு தடபுடல் விருந்து...ஆண்கள் மட்டுமே கலந்துகொண்ட விழா !