Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்களவை தேர்தல்: 8 மணி நேரம் என 3 ஷிப்டுகள்: தமிழகத்தில் மட்டும் 702 பறக்கும் படைகள்

மக்களவை தேர்தல்: 8 மணி நேரம் என 3 ஷிப்டுகள்: தமிழகத்தில் மட்டும் 702 பறக்கும் படைகள்

Siva

, ஞாயிறு, 17 மார்ச் 2024 (15:37 IST)
மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் மட்டும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் எட்டு மணி நேர ஷிப்டுகளாக மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

மக்களவைத் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன என்பதும் இதனால் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், மத்திய, மாநில அரசு என அனைத்து தரப்பினருக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தமிழக முழுவதும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகுந்த ஆவணம் என்று 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் சென்றால் பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் பறக்கும் படை ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மொத்தம் 702 பறக்கும் படையினர் 8 மணி நேர ஷிப்ட் அடிப்படையில் மூன்று ஷிப்டுகளில் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது,


Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை.. வருமான வரித்துறை அறிவிப்பு..!