மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது என்பதும் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் பணப்பட்டுவாடா அதிகமாக இருக்கும் என்பதால் தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் என்பதும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தணிக்கை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல்படி மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பான புகார்களை பொதுமக்கள் வருமான வரித்துறையிடம் தெரிவிக்கலாம்.
மேலும் புகார்களை 1800 425 6669 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், 94453 94453 என்ற Whatsapp எண் மூலமாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.