Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நூடுல்ஸ் சாப்பிட்ட 7 பசுமாடுகள் பலி: தாய்மார்களே உஷார்

நூடுல்ஸ் சாப்பிட்ட 7 பசுமாடுகள் பலி: தாய்மார்களே உஷார்
, வியாழன், 12 செப்டம்பர் 2019 (07:15 IST)
நூடுல்ஸ் என்றாலே குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவாக கருதப்படுவதால் பெரும்பாலான தாய்மார்கள் இந்த உணவை தங்களுக்கும் தங்களது குழந்தைகளுக்கு சமைத்து கொடுத்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஆனால் இந்த நூடுல்சில் குழந்தைகளின் உடல் நலத்தை கெடுக்கும் பல விஷயங்கள் இருப்பதாக சமூக நல ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் அருகே காலாவ்தியான நூடுல்ஸ் சாப்பிட்ட 7 பசுமாடுகள் திடீரென பலியான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது 
 
 
விழுப்புரம் முந்திரி காட்டில் மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடுகள் அடுத்தடுத்து திடீர் திடீரென செத்து விழுந்ததை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் முந்திரி காட்டுக்கு சென்று ஆய்வு செய்தபோது அங்கு ஏராளமான அதாவது மூட்டை மூட்டையாக காலாவதியான நூடுல்ஸ்கள் கொட்டப்பட்டிருப்பது தெரிந்து இருந்தது தெரியவந்தது. இந்த நூடுல்சை சாப்பிட்டுவிட்டுத்தான் பசுமாடுகள் பலியாகி இருப்பது என்பதை அந்த மாட்டின் சொந்தகாரர்கள் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர் 
 
 
கடைக்காரர்கள் காலாவதியான நூடுல்ஸ்களை குப்பையில் வீசுவதை தவிர்த்துவிட்டு அதனை தீயிட்டு அழித்துவிட வேண்டும் என்று அவ்வாறு செய்யாவிட்டால் இது போன்ற கால்நடைகள் பலியாகும் அபாயம் ஏற்படும் என்றும் நுகர்வோர் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் இருந்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பாடம் ஒரு உணவு பொருளை வாங்கும்போது அதன் காலாவதி தேதியை கண்டிப்பாக பார்த்து வாங்க வேண்டும். காலாவதியான உணவை சாப்பிட்ட மாடுகளே பலியாகி உள்ள நிலையில் அதை குழந்தைகளுக்கு கொடுத்தால் என்ன விபரீதம் ஏற்படும் என்பதை தாய்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிதம்பரம் கைது கண்டன கூட்டம்: ஒதுங்கிய முக்கிய தலைவர்கள்