சிதம்பரம் கைது கண்டன கூட்டம்: ஒதுங்கிய முக்கிய தலைவர்கள்

புதன், 11 செப்டம்பர் 2019 (21:40 IST)
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதை அடுத்து அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஒரு கண்டனக் கூட்டம் நடத்த வேண்டும் என்று தான் சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் எம்பியுமான கார்த்திக் சிதம்பரம் திட்டமிட்டார் 
 
 
இந்த கூட்டம் பிரமாண்டமாக நடத்தப்பட்டால் தான் மத்திய அரசுக்கு தங்களது வலு தெரியும் என்பதற்காக முக்கிய தலைவர்களை அழைக்க முடிவு செய்யப்பட்டது. திமுக தலைவர் முக ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டால் இந்திய அளவில் இந்த கூட்டம் பேசப்படும் என்று திட்டமிட்டது. ஆனால் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆரவம் காட்டவில்லை. 
 
 
முக ஸ்டாலின் மட்டுமின்றி ப.சிதம்பரத்தின் நெருங்கிய நண்பரான இந்து ராம் , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி உள்பட பலரும் இந்த கூட்டத்தை தவிர்க்கும் வகையில் ஒருசில காரணங்களை கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
 
இறுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சுப வீரபாண்டியன் , அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி போன்ற ஒரு சில தலைவர்களை மட்டும் வைத்து இந்த கூட்டத்தை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் 9/11 அமெரிக்கா இரட்டை கோபுரம் உண்மையில் விமானம் தாக்கித்தான் இடிந்ததா? - சதி பின்னணிகள்: விரிவான தகவல்கள்