Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு 63 மருத்துவர்கள் பலி: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (17:16 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தினமும் 50 முதல் 100 பேர் வரை பலியாகி வருகின்றனர் என்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் உள்பட பல விவிஐபிக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் அவர்களில் ஒருசிலர் பலியாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள மருத்துவர்கள் குறித்த தகவல் வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொரோனாவால் வைரஸால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சிகிச்சை செய்து வருகின்றனர். அவ்வாறு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் சிலர் கொரோனாவால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த கொரோனா காலத்தில் தமிழகத்தில் மொத்தம் 63 மருத்துவர்கள் உயிரிழந்ததாக இந்திய மருத்துவ கழகம் சற்றுமுன் தெரிவித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 12 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ கழகம் தெரிவித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

ஆசிரியை ரமணியை கத்தியால் குத்தியது ஏன்? கைதான மதன்குமார் வாக்குமூலம்..!

நெருப்பில்லாமல் புகையாது: அதானி-தமிழக அரசு ஒப்பந்தம் குறித்து பிரேமலதா..!

அடுத்த கட்டுரையில்
Show comments