Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

.6 கோடி உஜ்வாலா பயனாளிகள், ஒரு சிலிண்டருக்கு ₹400 மானியம் பெறுவர் - அண்ணாமலை

.6 கோடி உஜ்வாலா பயனாளிகள், ஒரு சிலிண்டருக்கு ₹400 மானியம் பெறுவர் - அண்ணாமலை
, செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (18:16 IST)
சிலிண்டர் விலை நாடு முழுவதும் ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய பாஜக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் சிலிண்டர் விலை ரூ.1118லிருந்து ரூ.918 ஆக குறைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து, தமிழக பாஜக அண்ணாமலை தன் சமூக வலைதளத்தில், நாடு முழுவதும் உள்ள அனைத்து சமையல் எரிவாயு பயனாளர்களுக்கும், ₹200 கூடுதலாக மானியம் அறிவித்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ₹200 குறைத்து அறிவித்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களுக்கு தமிழக பாஜக  சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உஜ்வாலா சமையல் எரிவாயு திட்டத்தின் கீழ், மேலும் 75 லட்சம் பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம், நமது மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள், உஜ்வாலா சமையல் எரிவாயு பயனாளிகளுக்கு ₹200 மானியம் அறிவித்திருந்தார்.  இந்த ஆண்டு மார்ச் மாதம், மேலும் ஓராண்டுக்கு ₹200 மானியம் நீட்டிக்கப்பட்டது. இன்றைய அறிவிப்பின் மூலம், நாடு முழுவதும் உள்ள 9.6 கோடி உஜ்வாலா பயனாளிகள், ஒரு சிலிண்டருக்கு ₹400 மானியமாகப் பெறுவார்கள்.

இந்த நேரத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி எண் 503- ல் கூறிய ஊழல் திமுக, ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் கடந்தும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதைக் குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விண்ணில் பாயும் ’ஆதித்யா-L1’ விண்கலம்.. நேரில் காண பொதுமக்களுக்கு அனுமதி..!